For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Gold | உச்சம் தொட்ட தங்கம் விலை..!! ரூ.55,000-ஐ தாண்டியது..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

10:40 AM May 20, 2024 IST | Chella
gold   உச்சம் தொட்ட தங்கம் விலை     ரூ 55 000 ஐ தாண்டியது     அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்
Advertisement

மே மாதம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் மே 18ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

அதன்படி, இன்று மே 20ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,900-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,652-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,216-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.101க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : Gpay பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! இனி பணம் அனுப்ப முடியாது..!! ஷாக்கிங் கொடுத்த கூகுள் நிறுவனம்..!!

Advertisement