கனமழை எச்சரிக்கை..!! ஒருவருக்கு எத்தனை பால் பாக்கெட்டுகள்..? ஆவின் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!!
வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுபெற வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, சென்னையில் பொதுமக்களுக்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்க ஆவின் பாலகம் தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் சார்பில் கூறுகையில், ”சென்னையில் 8 இடங்களில் 24 மணிநேரமும் ஆவின் பாலகங்கள் இயங்க உள்ளது. அதன்படி, மாதவரம் பால்பண்ணை பாலகம், பெசன்ட் நகர் பாலகம், வண்ணாந்துறை பாலகம், அம்பத்தூர் பால்பண்ணை கேட் பாலகம், அண்ணா நகர் அட்நஸ் டவர் பூங்கா பாலகம், சோழிங்கநல்லூர் பால்பண்ணை பாலகம், விருகம்பாக்கம் பாலகம், மயிலாப்பூர் சிபி ராமசாமி சாலை பாலகமும் ஆகியவை 24 மணி நேரம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் ஒருவருக்கு அதிகபட்சமாக 4 பால் பாக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். தேவையான அளவு ஆவின்பால் பவுடர் மற்றும் யூஎச்டி பால் ஆவின் பாலகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட கூடுதலாக ஆவின் பால் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் தேவைப்படும் இடங்களில் தற்காலிக பால் விற்பனை நிலையங்கள் அமைத்து பால் மற்றும் பால் பவுடர் விநியோகிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ஃபெங்கால் புயல் எப்போது எந்த இடத்தில் கரையை கடக்கிறது தெரியுமா..? பாதிப்பு எப்படி இருக்கும்..?