For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நெல்லையில் மீண்டும் சம்பவம் செய்யப்போகும் கனமழை..!! ஆட்சியர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

03:59 PM Jan 08, 2024 IST | 1newsnationuser6
நெல்லையில் மீண்டும் சம்பவம் செய்யப்போகும் கனமழை     ஆட்சியர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
Advertisement

நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

நாளை (ஜனவரி 9) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ”திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (ஜனவரி 9) மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 10) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

யாரும் ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை இறக்கவோ வேண்டாம். அரசால் அவ்வப்போது வழங்கப்படும் எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement