For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கனமழை எதிரொலி..!! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!! ஆட்சியர்கள் அறிவிப்பு..!!

Due to heavy rains, a holiday has been declared for schools only in Erode district today.
08:03 AM Oct 22, 2024 IST | Chella
கனமழை எதிரொலி     இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை     ஆட்சியர்கள் அறிவிப்பு
Advertisement

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா – மேற்கு வங்க கடற்கரையை 24ஆம் தேதி நெருங்கும்.

இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 24 முதல் 27ஆம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Read More : ஆபத்து..!! உடனே இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்கள்..!! கொழுப்பு கல்லீரல் நோய் பற்றி தெரியுமா..?

Tags :
Advertisement