கனமழை எதிரொலி..!! மீண்டும் அதிரடியாக உயர்ந்த தக்காளி விலை..!! ஒரு கிலோ எவ்வளவு..? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!
வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும் மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மிகவும் பிரபலமானது. இந்த சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், கனமழை எதிரொலியால் வரத்து குறைந்துள்ளதால், தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட தக்காளி, தற்போது ரூ.100-க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு தினசரி 1,300 டன் தக்காளி வருவது வழக்கம். ஆனால், மழை காரணமாக வரத்து 800 டன்னாக குறைந்துள்ளது.