கனமழை எதிரொலி!. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்கள் ரத்து!. உதவி எண்கள் அறிவிப்பு!.
சென்னை பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் 4 ரயில்கள் ரத்து செய்யபப்ட்டுள்ளது. திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இன்று மாலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய சப்தகிரி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யபப்ட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு ஈரோடு புறப்பட வேண்டிய ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரத்து செய்யபப்ட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யபப்ட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 9.15 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு காவிரி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யபப்ட்டுள்ளது.
இதேபோல், மாலை 5.55 மணிக்கு புறப்படும் சென்ட்ரல் - ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16089) ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 10.30 மணிக்கு புறப்படவேண்டிய சென்ட்ரல் - போடிநாயக்கனூர் (20601) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரயில்களின் புறப்பாடு, வருகை தொடர்பாக அறிந்துகொள்ளும் வகையில் தெற்கு ரயில்வேயின் சென்னை பகுதி சார்ப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 044-25330952, 25330953 ஆகிய உதவி எண்களில் பயணிகள் தொடர்புகொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Readmore: 10.கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!. எப்போது கரையை கடக்கும்?