மீண்டும் மீண்டுமா.? சென்னைக்கு மீண்டும் எச்சரிக்கையா.? கலக்கத்தில் பொதுமக்கள்.!
கடந்த டிசம்பர் மாதம் கன மழை மற்றும் புயலால் தமிழகம் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்தது. டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடும் மழை பாதிப்பிற்குள்ளானது. வரலாறு காணாத கனமழை பொழிவால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் நிதி உதவிகள் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். சென்னையைத் தொடர்ந்து தென் மாவட்டங்களான தூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளும் கடும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் மீண்டு வரும் நிலையில் தற்போது இந்த பகுதிகளுக்கு மலை எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி இருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வானிலை ஆய்வு நிலையத்தின் அறிவிப்பின்படி தமிழக முழுவதும் கனமழைக்கான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி தேனி திண்டுக்கல் நீலகிரி பகுதிகளில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை மறுநாள் நெல்லை கன்னியாகுமரி விருதுநகர் தென்காசி தஞ்சாவூர் திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. மேலும் ஏழாம் தேதி சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் பயத்தில் உள்ளனர்.