முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’திட்டமிட்டபடி தவெக மாநாடு நடக்காது போலயே’..!! இவ்வளவு சிக்கல்கள் இருக்கா..? எல்லாமே மாறுது..!!

It has been reported that Bussy Anand has approached Vijay's astrologer regarding the change of the conference date
08:44 AM Sep 03, 2024 IST | Chella
Advertisement

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனக்கான செல்வாக்கை பறைசாற்ற அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு என பல்வேறு இடங்களை பரிசீலித்த பிறகு, இறுதியாக விக்கிரவாண்டியை தேர்வு செய்திருக்கிறார். அங்கு வி.சாலை என்ற இடத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடைபெறுவதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கான அனுமதி கோரி, புஸ்ஸி ஆனந்த் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் எஸ்.பி. அலுவலகத்திலும் மனு அளித்திருந்தார்.

Advertisement

வாகனங்களை நிறுத்துவதற்காக மட்டுமே 5 ஏக்கர் நிலம், மாநாட்டுக்கு வந்து செல்ல 3 வழிகள், உணவு, குடிநீர், கழிவறை, ஆம்புலன்ஸ் போன்ற வசதிகள் செய்து தர திட்டமிட்டிருக்கிறார்கள் நிர்வாகிகள். மாநாட்டுப் பகுதியில் காவல்துறையின் பாதுகாப்பும், தீயணைப்புத்துறையின் ஒத்துழைப்பும் வேண்டும் என்று கோரியுள்ளனர். மாநாட்டுக்கு தேர்வாகியுள்ள இடம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிகவும் அருகிலேயே 300 மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் அனுமதி வழங்குவதில் சிக்கல் நீடிப்பதாகத் என தெரிகிறது.

ஏற்கனவே 2014இல் தேசிய நெடுஞ்சாலை அருகே உளுந்தூர்பேட்டை – எறஞ்சி என்ற இடத்தில், தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டின்போதும் இதே நிலை நேரிடக்கூடும் என்பதால், அனுமதி மறுக்கப்படலாம் என்று தெரிகிறது. மாநாட்டுக்காக தேர்வாகியுள்ள பகுதியில் சுமார் 10 கிணறுகள் இருப்பதால், இதுவும் காவல்துறையின் தயக்கத்துக்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. விஜய் விரும்பியபடி முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடக்குமா? என்பது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கையில் தான் உள்ளது.

இந்நிலையில், மாநாடு தேதி மாற்றம் தொடர்பாக விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரை புஸ்ஸி ஆனந்த் அணுகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 23ஆம் தேதி ஒருவேளை அனுமதி கிடைக்காவிட்டால், மாற்றுத் தேதியைக் குறிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தாமதம் ஏற்பட்டால் மாற்றுத் தேதியை தற்போதே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால், ஜோதிடராக உள்ள கடலூரை சேர்ந்த சந்திரசேகர் என்பவரை புஸ்ஸி ஆனந்த் சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்கள் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்துவது உகந்தது இல்லை என முடிவு செய்துள்ள தவெக தலைவர் விஜய், ஒருவேளை தள்ளிப் போட்டால் ஜனவரியில் மாநாடு நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Read More : ஷூட்டிங் இறுதி நாள்..!! பொள்ளாச்சி ரூம்ல வெச்சு என்னை பலாத்காரம் செய்ய பார்த்தாங்க..!! நடிகை சர்மிளா பரபரப்பு பேட்டி..!!

Tags :
cinemathalapathy vijayvijay
Advertisement
Next Article