Heart Attack | ஒருசில நிமிட கோபத்தால் கூட மாரடைப்பு வரும்..!! அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்..!!
Heart Attack | கோபம் கொள்வது உடல் நலத்தை பாதிக்கும் என மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வந்தாலும், அதை பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், கோபத்தால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய, அமெரிக்காவை சேர்ந்த American Heart Association என்ற ஆய்வு நிறுவனம், 280 இளைஞர்களை கொண்டு சோதனை நடத்தியது. ஆரோக்கியமான இளைஞர்களை கொண்டு சோகம், மகிழ்ச்சி, கோபம் மற்றும் பதற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து American Heart Association வெளியிட்ட ஆய்வறிக்கையில், கோபப்படுவதால், ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதயமும் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சியில் பங்கேற்ற மற்ற குழுவினருடன் ஒப்பிடுகையில், கோபத்தின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில், அந்த குழுவில் இருந்தவர்களுக்கு ரத்த நாளங்களின் விரிவாக்கம் கணிசமாக குறைந்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.
ரத்த நாளங்களின் பலவீனமான விரிவாக்கம் நேரடியாக தமனி செயல்பாட்டை பாதிப்பதால், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சீறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. வெறும் 8 நிமிடங்கள் கோபப்பட்டாலே இத்தகைய பாதிப்புகள் அனைத்தும் ஏற்படுவதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், கோபத்தை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கோபத்தை கட்டுப்படுத்த யோகா உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
Read More : டீ குடிக்கும்போது இதை மட்டும் தொடவே தொடாதீங்க..!! மீறினால் என்ன ஆபத்து வரும் தெரியுமா..?