முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பனிக்கால சளி, இருமல், தொண்டை வலிக்கு இதமான பூண்டு, மிளகு சாதம்.. டக்குனு செஞ்சிடலாம்.!

06:28 PM Jan 10, 2024 IST | 1newsnationuser5
Advertisement

குளிர்காலத்தில் பலருக்கும் பனியின் காரணமாக சளி இருமல் உள்ள தொந்தரவுகள் ஏற்படலாம். அதிகப்படியான பணி பொய்களின் காரணமாக இந்த காலகட்டத்தில் தொண்டையில் தொற்று ஏற்பட்டு புண் மற்றும் வலி போன்றவை இருக்கும். இதற்கு காரசாரமான மிளகு, பூண்டு சாதம் செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். எப்படி செய்வது என பார்க்கலாம். 

Advertisement

தேவையான பொருட்கள் ; மிளகு - 2 ஸ்பூன், அரிசி சாதம் - ஒரு கப், சீரகம் - ஒரு ஸ்பூன், எண்ணெய் - 3 ஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், பூண்டு - 10 பல், சின்ன வெங்காயம் - 10, வரமிளகாய் - 2, உப்பு, கறிவேப்பிலை. 

செய்முறை ; வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு போட்டு எடுத்தவுடன் சீரகம் மற்றும் பூண்டை நசுக்கி போட்டு நன்கு வாசம் வருமளவு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின், பூண்டு வாசம் நன்றாக வந்த பின்னர், நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கி, பொன்னிறமானதும், அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 

இதில், தேவையான அளவிற்கு உப்பு சேர்க்க வேண்டும்.பிறகு, அதில் சாதத்தை கொட்டி நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், நெய் அல்லது எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து கிளரவும். இறக்கப்போவதற்கு முன்பு மிளகை நன்கு பொடியாக நசுக்கி சாதத்தின் மேல் தூவி கிளறி விட்டு இறக்கினால், சூப்பரான சுவையான மிளகு, பூண்டு சாதம் ரெடி.

Tags :
garlichealthreciperice
Advertisement
Next Article