For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆரோக்கிய காலை உணவு!! அல்சரை குணப்படுத்தும் பழைய சாதம்..! இவ்வளவு நன்மைகளா?

05:57 AM May 12, 2024 IST | Baskar
ஆரோக்கிய காலை உணவு   அல்சரை குணப்படுத்தும் பழைய சாதம்    இவ்வளவு நன்மைகளா
Advertisement

நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக இருந்தது வந்தது பழைய சாதம்தான். ஆரோக்கியமான காலை உணவான பழைய சாதத்தில் அவ்வளவு நன்மைகள் ஒளிந்து கிடக்கின்றன. நாம் இதனை பழைய சாதம், பழைய சோறு, பழஞ்சோறு, ஏழைகளின் உணவு, ஐஸ் பிரியாணி என்றெல்லாம் வெவ்வேறு கோணங்களில் பெயரிட்டு அழைக்கிறோம்.

Advertisement

நம்மூர் முதியவர்களிடம் கேட்டுப்பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் எதுவென்று? கண்ணை மூடிக்கொணடு சொல்வார்கள். பழைய சோறுதாப்பா என்று..பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பரியத்துக்கு உண்டு. இன்றளவும் கிராமங்களில் வெயிலில் வாடி வதங்கி வருபவர்கள் உரிமையோடு கேட்கும் பானம் நீராகாரம் தான். இது உடல் உஷ்ணத்தை குறைத்து குளர்ச்சியான புத்துணர்ச்சியை சேர்த்து கொடுக்கும் அற்புறத பானம். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அறிமுகமான காஃபி, நீராகாரத்தை ஓரங்கட்டிவிட்டது.

பழைய சாதத்தின் நன்மைகள்: பழைய சாதம் மற்றும் அதை ஊற வைத்த நீராகாரத்தில் (புளிச்ச தண்ணீர்) இருந்து வழக்கமாக நாம் எடுத்துக் கொள்ளும் அரிசி உணவுகளை விட அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை பெற முடியும். சாதம் ஊற வைத்த தண்ணீர் சாதாரண தண்ணீரை காட்டிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.வேகவைத்த சாதத்தை குறைந்தது 12 மணி நேரம் நொதிக்க வைக்கும்போது, வழக்கமாக சாதத்தில் கிடைக்கும் இரும்புச் சத்தின் அளவை விட 21 மடங்கு இரும்புச்சத்து அதிகம் கிடைப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.

வைட்டமின் டி: பொதுவாக 100 கிராம் அரிசி சாதத்தில் இருந்து 3.4 மில்லிகிராம் அளவுக்கு இரும்புச்சத்தை நாம் பெற முடியும். இதுவே 12 மணி நேரம் நொதிக்கப்பட்ட சாதத்தில் அந்த இரும்புச்சத்தின் அளவு 73.91 மில்லி கிராம் அளவுக்கு (கிட்டதட்ட 203 சதவீதம்) அதிகரிக்குமாம். கொதிக்க வைக்கப்பட்ட பழைய சாதத்தில் அதிகப்படியான அளவு வைட்டமின் டி உருவாகிறது. இது அதிகப்படியான உடல் சோர்வை தீர்க்க உதவுகிறது. அதோடு வயிற்றில் அமிலத் தன்மையும் வாயுவும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதோடு உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கச் செய்கிறது.

அல்சரை குணப்படுத்தும் பழைய சாதம்: பழைய சாதத்தில் உள்ள வைட்டமின் பி வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றி அல்சரை குணப்படுத்த உதவுகிறது. சாதத்தை நெதிக்க வைக்கும்போது அதில் ஏராளமான நுண்ணுயிரிகளும் நுண்ணூட்டச்சத்துக்களும் உற்பத்தி ஆகின்றன. இவை நம்முடைய உடலின் பிஎச் அளவை மேம்படுத்துவதோடு குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. நம்முடைய வயிற்றில் இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் ஜீரண சக்தியை மேம்படுத்தச் செய்வதோடு, ஆரோக்கியமான குடல் இயக்கத்துக்கும் உதவி செய்கிறது.

மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு: பழைய சாதம் மிகச்சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது. குடல் இயக்கங்கள் சீராக இருப்பதால் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.

உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு: பழைய சாதமும் அதில் நொதிக்க வைக்கப்பட்ட தண்ணீரிலும் அதிக அளவிலான பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. இது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் நொதிக்க வைக்கப்பட்ட பழைய சாதத்தில் இருந்து நாம் அதிகப்படியான செலீனியம் மற்றும் மக்னீசியத்தையும் பெற முடியும். இவை இரண்டுமே நம்முடைய எலும்புகள் உறுதியாக இருக்க உதவுகின்றன.

பழைய சாதம் செய்முறை: மீதமான சாதத்தை ஒரு மண் சட்டியிலோ அல்லது பாத்திரத்திலோ அதில் மீண்டும் நிறைய நீரும் அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து கலந்து மூடி வைத்து விட வேண்டும். இன்று மதியம் வைத்த சாதமாக இருந்தால் மாலையில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். மண் சட்டியில் வைப்பது இன்னும் நல்லது.இரவு முழுவதும் சாதம் அந்த நீரில் நொதிக்க ஆரம்பிக்கும். காலையில் எடுத்துப் பார்த்தால் பழைய சோறு நம்முடைய காலை உணவுக்குத் தயாராக இருக்கும். பழைய சோறுக்கு தொட்டுக் கொள்ள பெஸ்ட் காமினேஷன் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய், ஊறுகாய்.

Read More: Solar Storm | பூமியை தாக்கிய சூரிய புயல்.!! வானில் நிகழ்த்திய மாயாஜாலம்.!! முழு விபரங்கள்.!!

Tags :
Advertisement