நம்மை ஆச்சரியப்பட வைக்கும் ரோஜா இதழ்களின் மருத்துவ குணங்கள்.!
நாம் அழகிற்காக தலையில் சூடும் ரோஜா மலரின் இதழ்களில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் அழகு சாதன பொருட்களின் தயாரிப்பிலும் உடல் துர்நாற்றத்தை போக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை கண்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரோஜா இதழ்களை நன்றாக கழுவி மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு உடலுக்கு குளிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த இதழ்கள் சீதபேதி வயிற்றுக் கடுப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இவை வயிற்றில் ஏற்படும் புண்கள் குணமாவதற்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. ரோஜா பூவின் இதழ்களில் இருந்து தான் பன்னீர் தயாரிக்கப்படுகிறது.
1500 கிராம் ரோஜா இதழ்களை நான்கு லிட்டர் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி எடுப்பதே பன்னீராகும். இது கண்களில் ஏற்படும் எரிச்சலுக்கு சிறந்த மருந்தாகும். கண்களில் எரிச்சல் ஏற்படும்போது இரண்டு சீட்டு பன்னீர்விட்டால் அந்த எரிச்சல் குணமாகிவிடும் . பன்னீர் கண்களுக்கான மருந்து தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அழகு சாதன பொருட்களின் தயாரிப்பிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
அதிக வியர்வை மற்றும் உடல் துர்நாற்றம் பிரச்சனை உடையவர்கள் பன்னீரை தண்ணீரில் கலந்து குளித்தால் இந்தப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். ரோஜா இதழ்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் மிகவும் சுவையாக இருக்கும். குல்கந்து என்பது ரோஜா இதழ்களில் தயாரிக்கப்படும் சுவைமிக்க ஒரு இனிப்பு வகையாகும்.