"மூக்குத்தி முத்தழகு.." மூக்குத்தி அழகு மட்டுமில்ல.! அதுல இவ்ளோ நன்மைகளும் இருக்காம்.! வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
மூக்குத்தி அணிவது பல பெண்களுக்கு விருப்பமான ஒன்று. பண்டைய காலம் தொட்டே நம் நாட்டு கலாச்சாரத்தில் பெண்கள் மூக்குத்தி அணிந்து வருகின்றனர். இது பெண்கள் அழகின் முக்கிய அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் கலாச்சார அடையாளமாக இருந்து மூக்குத்தி இன்று நாகரீகமான ஒன்றாக மாறிவிட்டது. எனினும் பெண்கள் மூக்குத்தி அணிவதால் ஆன்மீக ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பல்வேறு உண்மைகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மூக்குத்தி அணிந்து கொள்ளும் பெண்களின் வாழ்வில் ஆண்களின் பங்கு சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அவர்களது வாழ்வில் சகோதரன் மற்றும் கணவர் எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள். மேலும் மூக்குத்தி அணிவது லட்சுமி தேவியின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் மூக்குத்தி அணியும் பெண்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது. இடது பக்கம் மூக்கு குத்துவதால் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் சீராக செயல்படும். இனப்பெருக்க உறுப்புகளின் நரம்புகள் இடது நாசியுடன் தொடர்போடு இருப்பதால் இவை கர்ப்பப்பை மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் வலப்பக்கம் மூக்கு குத்தும் போது வலதுபுற மூளை நரம்புகளும் இடதுப்பக்க மூக்கு குத்தும் போது இடதுபுற மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கும் எனவும் மருத்துவரீதியாக சொல்லப்படுகிறது
ஜாதகங்களின்படி புதன் அல்லது சந்திரன் ஆறாவது வீட்டில் இருந்தால் பெண்கள் மூக்குத்தி அணிவது நல்லது. ஏனெனில் மூக்கின் நாசி குருவைச் சேர்ந்ததாகவும் மூக்கின் முனை புதனை சேர்ந்ததாகவும் ஜாதகத்தில் பார்க்கப்படுகிறது. மேலும் ஜோதிடத்தின் படி தங்க ஆபரணம் புதன் செவ்வாய் மற்றும் சூரிய கிரகங்களின் தாக்கத்தை ஈர்க்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. எனவே தங்கத்தினாலான மூக்குத்தியை அணிவதன் மூலம் இந்தக் கிரகங்களின் அருளைப் பெறலாம். எனினும் வெள்ளி மற்றும் பிற உலோகங்களான மூக்குத்தியும் அணியலாம்.