பாதாம் பருப்பு சாப்பிட்டால் சிறுநீரக கல் ஏற்படுமா?? நிபுணர்கள் அளித்த அதிர்ச்சி தகவல்..
பாதாம் பருப்பில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ, புரதச்சத்து, நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்த பாதாமை சாப்பிடுவதால், இதயத்தை வலுப்படுத்துவது மட்டும் இல்லாமல், இரத்த அழுத்தத்தைக் குறைத்து, புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப, பாதாம் பருப்பை அதிகமாக சாப்பிடும் போது சிறுநீரக கற்கள் உருவாகும் என்று கூறப்படுகிறது.
இதனால் சிறுநீரக பிரச்சினைகள் இருப்பவர்களும், சிறுநீரக கற்கள் உள்ளவர்களும் பாதாம் சாப்பிடுவதை குறைப்பது நல்லது. பாதாமில் உள்ள ஆக்சலேட்டுகள் கால்சியத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. பெரியவர்கள் தினமும் 20-23 பாதாம் சாப்பிடுவது பாதுகாப்பானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதற்கு முன், மருந்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நாளது என்று பரிந்துரைக்கப்படுகிறது.