வாரம் ஒரு முறை ஆட்டுக்குடல் சாப்பிட்டு பாருங்க, உங்களுக்கு எந்த நோயும் வராது!!!
ஆட்டிக்கறி, பலருக்கும் பிடித்த அசைவ உணவு. இதில், சிவை மட்டும் இன்றி, பல ஆரோக்கிய சத்துக்களும் உள்ளது. ஆடுக்கறியில் எப்படி சத்துக்கள் அதிகம் உள்ளதோ, அதே போல் ஆட்டின் குடலில் பல நன்மைகள் உள்ளது. ஆம், ஆட்டின் குடலை வறுவலாகவும் அல்லது குழம்பாகவும் சமைத்து சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆட்டுக்குடலில் இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்களும், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்றவை அதிகம் உள்ளது. அது மட்டும் இல்லாமல், குடல் இறைச்சி புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு அளிக்கும். உங்களுக்கு குடல் தொடர்பான எந்த பிரச்சனை இருந்தாலும் நீங்கள் கட்டாயம் இதை சாப்பிட வேண்டும்.
ஆட்டுக்குடலில் இருக்கும் துத்த நாகத்தின் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகிறது. இதனால் குளிர் காலங்களில் ஏற்படும் நோய் தொற்றில் இருந்து உடலை பாதுகாக்க ஆட்டு குடல் சாப்பிடுவது அவசியம். ஆட்டுக்குடல் சாப்பிடுவதால், மூளையின் செயல்பாடு மற்றும் அறிவாற்றல் செயல்திறனை அதிகரிக்கும். குடல் இறைச்சிகளில் உள்ள கிரியேட்டின், தசை செயல்திறனை மேம்படுத்த உதவும்.
Read more: பாதாம் பருப்பு சாப்பிட்டால் சிறுநீரக கல் ஏற்படுமா?? நிபுணர்கள் அளித்த அதிர்ச்சி தகவல்..