50 கிராம் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலில் ஏற்ப்படும் மாற்றங்கள்…!
பப்பாளி சுவையில் மட்டுமல்லாது ஆரோக்கியத்திலும் சிறந்த ஒன்றாகும். இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்திலும் நல்ல சுவையிலும் இருக்கும். இந்த பழத்தில் கருப்பு நிற ஜெலட்டினஸ் விதைகள் உள்ளது. இது பலவித சுகாதார நன்மைகளை நமக்கு வழங்குகிறது.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது. இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை பப்பாளிக்கு உள்ளதால் எடை குறைப்புக்கு இது நல்ல பயன் அளிப்பதாக அமைகிறது. மாரடைப்பு ஏற்படுத்தும் அபாயத்தையும் தடுக்கிறது.
தினமும் 50 கிராம் பப்பாளி சாப்பிட்டு வர கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். பல் சம்பந்தமான குறைபாடு சிறுநீரக பையில் உண்டாகும் கல் போன்றவற்றிற்கு பப்பாளி ஒரு அருமருந்தாகும். மேலும் நரம்புகள் வலுவடைய, ஆண்மை தன்மை பலப்பட, ஞாபக சக்தி அதிகப்படுத்த பப்பாளி உதவுகிறது …
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு மட்டுமில்லாது இதில் உள்ள வைட்டமின் ஏ கேசத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பப்பாளியை தொடர்ந்து உண்ணுவதால் அவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாவது இல்லை என ஆய்வுகள் கூறுகிறது.