For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கைகளுக்கு அழகு சேர்க்கும் மருதாணி.. உடலில் இவ்வளவு நோய்களை தீர்க்குமா.!?

05:10 AM Jan 31, 2024 IST | 1newsnationuser5
கைகளுக்கு அழகு சேர்க்கும் மருதாணி   உடலில் இவ்வளவு நோய்களை தீர்க்குமா
Advertisement

தமிழ்நாட்டில் பலரும் மருதாணி இலையை அரைத்து அழகுக்காக கைகளில் வைத்து கொள்கின்றனர். அந்த காலத்தில் இருந்து இன்று வரை திருமணம் என்றாலே அந்த இடத்தில் மருதாணி இல்லாமல் இருக்காது. தற்போதுள்ள காலகட்டத்தில் திருமணத்திற்காக மருதாணியை வைப்பதற்கு மெகந்தி பங்ஸன் என்று தனி நிகழ்ச்சியாகவே வைக்க ஆரம்பித்து விட்டனர். அந்த அளவிற்கு மருதாணி சிறப்புவாய்ந்ததாக உள்ளது.

Advertisement

மேலும் மருதாணி அழகிற்காக மட்டுமல்லாமல், உடலில் பல்வேறு நோய்களை விரட்டவும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருதாணி செடியில் உள்ள இலை, பூ, காய் என அனைத்துமே உடலில் நோய்களை விரட்டுகிறது. இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும், உடலில் என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்பதை குறித்து பார்க்கலாம்?

1. உள்ளங்கையில் மருதாணியை அரைத்து வைப்பதன் மூலம் உடலில் உள்ள நரம்புகளை வலிமையாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
2. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிபட்டால் புண்ணாகி எளிதில் ஆறாது. இவ்வாறு நீண்ட நாட்களாக உடலில் இருக்கும் புண்களை ஆற்றும் வல்லமை மருதாணிக்கு உள்ளது.
3. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாதத்தில் ஒருவித எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணி இலையை அரைத்து பாதத்தில் வைப்பதன் மூலம் குளிர்ச்சியாக இருக்கும்.
4. சேற்றுப்புண், காலில் ஆணி, உடலில் அரிப்பு போன்ற பாதிப்புகளுக்கு மருதாணி இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து தடவி வந்தால் குணமாகும்.
5. மருதாணி இலையை அரைத்து கைகளில் வைக்கும் போது அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் உடலில் பித்தம் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இவ்வாறு மருதாணி இலையை வைத்து நம் உடலில் உள்ள பித்தத்தின் அளவை நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வந்தனர்.
6. மன அழுத்தம், பதட்டம், கோவம் போன்ற மன சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மருதாணி வைப்பதன் மூலம் தீர்வு கிடைக்கும்.
7. மருதாணி இலையை சுடு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, மாதவிடாயின் போது ஏற்படும் வயிறு வலியை சரி செய்யும்.
8. மருதாணி செடியில் உள்ள பூக்கள் உடலை குளிர வைத்து சூட்டினால் வரும் நோய்களை சரி செய்கிறது.
9. மருதாணி செடியின் பூக்களை ஒரு துணியில் வைத்து கட்டி தலையணையின் அடியில் வைத்து படுத்துக் கொண்டால் நன்றாக தூக்கம் வரும்.
10. மருதாணி பூ மற்றும் இலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொண்டு தைலமாக பயன்படுத்தலாம். இந்த தைலம் நரைமுடி, முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சினைகளை சரி செய்யும். இவ்வாறு மருதாணி தலை முதல் கால் வரை பல்வேறு நோய்களுக்கும் தீர்வு அளிக்கிறது.

Tags :
Advertisement