வெந்தையத்தை இப்படி சாப்பிட்டால் தான், கொழுப்பை குறைக்க முடியும்.. டாக்டர் சிவராமன் பகிர்ந்த தகவல்..
பாரம்பரியமாக நாம் பயன்படுத்தும் பல சமையல் பொருள்களில் பல மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் இன்று உள்ள காலகட்டத்தில், நாம் நாகரீகம் என்ற பெயரில், வீட்டிலேயே இருக்கும் இயற்கையான மருத்துகளை விட்டுவிட்டு, அதிக பணம் கொடுத்து, கெமிக்கல் நிறைந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்துகிறோம். அந்த வகையில், பல மருத்துவ குணங்களை கொண்ட ஒரு பொருள் தான் வெந்தையம். பார்க்க சிறிதாக இருந்தாலும், இதில் உள்ள சத்துக்கள் ஏராளம். வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் இரும்பு போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெந்தையத்தை நாம் தொடர்ந்து சாப்பிடுவதால், சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பலருக்கு வெந்தையம் உடலுக்கு நல்லது என்று தெரியும், ஆனால் வெந்தையத்தை எப்படி சாப்பிட வேண்டும் தெரியாது. இந்நிலையில், வெந்தயத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். அந்த வகையில், உடலில் சூடு அதிகம் இருப்பவர்கள், இரவு முழுவதும் வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை நன்கு ஊறிய வெந்தயத்தை சாப்பிடுவதால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால், வெந்தயத்தை லேசாக வறுத்து அதனை பொடி செய்து வைத்து சாப்பிட வேண்டும். வெந்தையத்தை இப்படி ஊறவைத்தோ அல்லது பொடி செய்தோ சாபிட்டால் தான் அதன் நன்மைகள் முழுமையாக கிடைக்கும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
வெந்தயம் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், முளைக்கட்டிய வெந்தயத்தை தினசரி குறைந்த அளவு சாப்பிடுவதால், பிரசவத்தின் போது ஏற்படும் சிரமத்தைக் குறைக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகம் சாப்பிட்டால், கர்ப்பப் பை சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். வயிறு மற்றும் தொண்டைப் பகுதியில் ஏற்படும் புண்களை வெந்தயம் குணமாக்குகிறது.
Read more: “சொந்த அண்ணனை சைட் அடிப்பியானு கேப்பாங்க..” சூர்யாவின் தங்கைக்கு நேர்ந்த சம்பவம்..