இனி சப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்..
தற்போது உள்ள காலகட்டத்தில், எனக்கு சாப்பிடவே நேரம் இருப்பதில்லை, இதில் எங்கிருந்து நான் சமைப்பது என்று பலர் கேட்பது உண்டு. தினமும் ஹோட்டலில் வாங்கி சாப்பிட முடியாது என்பதால், பலர் தங்களின் நேரத்தை மிச்சப்படுத்த பல வழிகளை பின்பற்றுவது உண்டு. அப்படி அநேகர் செய்யும் வேளைகளில் ஒன்று தான் சப்பாத்தி மாவை பிசைந்து ஃப்ரிட்ஜில் வைப்பது. தற்போது உள்ள அவசர காலக்கட்டத்தில், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சப்பாத்தி மாவை பிசைந்து வைத்துக்கொண்டு, பின்னர் தங்களுக்கு தேவைப்படும் போது அதனை பயன்படுத்திக் கொள்வது உண்டு.
சில சமயங்களில் சப்பாத்தி செய்த பிறகு, மிச்சம் இருக்கும் பிசைந்த மாவை, வீணாக்க மனது இல்லாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுவது உண்டு.
இப்படி பிசைந்த மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது நல்லதா என்று நீங்கள் யோசித்தது உண்டா? நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்த செய்ய இந்த காரியம் உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தி விடும் என தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் மாவில், பூஞ்சை தொற்றை உண்டாக்கும் ஈஸ்ட்டை உருவாகும். இதனால் ஒரு சிலருக்கு உடலில் ஒவ்வாமையை ஏற்பட்டு, வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அது மட்டும் இல்லாமல், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் பிசைந்த மாவில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அழிந்து விடும். இதனால் உங்களுக்கு எந்த ஊட்டச்சத்தும் கிடைக்காது.
ஒரு பக்கம் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் மாவால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டும் இல்லாமல், அதன் சுவை குறைந்து விடும். ஆம், குளிர் சாதன பெட்டியில் வைப்பதால், மாவில் உள்ள பசைத்தன்மை மாறி, மாவு இறுகிவிடும். இதனால் சப்பாத்தி சாஃப்டாக இல்லாமல், சாப்பிடுவதற்கு சற்று கடினமாக இருக்கும். இதனால் முடிந்த வரை சப்பாத்தி வேண்டும் பொழுது மட்டும் மாவை பிசைந்து பயன்படுத்துங்கள்.
Read more: அவசரமாக வந்தாலும் அடக்குபவரா நீங்கள்..? உங்களுக்கு தான் இந்த பதிவு..!