ஒரு ஸ்பூன் போதும்..! புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கலாம்..
அனைவரின் சமையலறையிலும் சுலபமாக கிடைக்கும் கரு மிளகு, அதீத ஆரோக்கிய குணங்களை கொண்டது. இதனை தேடி பல்வேறு நாட்டினரும் இந்தியாவிற்கு வந்த வரலாறு உள்ளது. எவ்வளவு தான் சுவையாக அசைவ உணவுகள் சமைத்தாலும் அதில் சிறிதளவு மிளகு தூள் சேர்க்கும் போது தான் அதன் சுவை கச்சிதமாக பொருந்துகிறது. பெப்பர் சிக்கன், பெப்பர் கிரேவி, பெப்பர் ரோஸ்ட் என உணவுக்கு பெயராகவே இருக்கும் அளவிற்கு சுவையில் தனி இடம் பிடித்துள்ளது.
இந்த அளவுக்கு சுவை மிகுந்த கருமிளகில் பைப்பரின் என்ற கலவை உள்ளது. இது அல்சைமர் மற்றும் பார்க்கின்ஸன் போன்ற மூளை சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகளை எளிதில் சரிசெய்கிறது. மேலும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் கொழுப்பு எரிப்பு அதிகரிப்பதுடன் கொழுப்பு செல்கள் உடையவும் வழிவகுக்கிறது. இது உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பார்கள். அதோடு ஒரு சிட்டிகை மிளகு சேர்ந்து குடிப்பது உடல் எடை குறைப்பில் சிறந்த முன்னேற்றம் தரும்.
Read more: காய்கறிகளை, இப்படி சமைத்தால் தான் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.. டாக்டர் சிவராமன் அட்வைஸ்…