பலாப்பழம் சாப்பிட்டு இருப்பீங்க பலாக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா.? இத படிச்சதுக்கு அப்புறம் மிஸ் பண்ண மாட்டீங்க.!
முக்கனிகளில் ஒன்றாக கருதப்படுவது பலாப்பழம். நல்ல சுவையும் மனமும் கொண்ட இந்த பழம் மித வெப்ப மண்டல காடுகளில் வளரக்கூடியதாகும். இந்த பலாப்பழத்தை பழமாக சாப்பிடுவதை விட காயாக சாப்பிடுவது ஏராளமான நன்மைகளை தரக்கூடியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பலாக்காயில் புரதச்சத்து கார்போஹைட்ரேட் நார்ச்சத்து இரும்பு சத்து, பொட்டாசியம் மக்னீசியம் வைட்டமின் சி மற்றும் சோடியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது.
பலாக்காயில் வைட்டமின் சி மற்றும் பைட்டோ நியூட்ரியாண்டுகள் நிறைந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை தாக்கி அழிக்க வல்லது. இதனால் தொடர்ச்சியாக பலாக்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. இவற்றில் இருக்கக்கூடிய சோடியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய தாமிரச்சத்து தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்துகிறது
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பலாக்காய் ஒரு சிறந்த உணவாகும். இவற்றின் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு. இதனால் இவற்றை உணவில் எடுத்துக் கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது . இவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின் சி உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கிறது. மேலும் பலாக்காயில் இருக்கும் நார்ச்சத்து அஜீரணக் கோளாறு மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது. பலாக்காயை உணவில் எடுத்துக் கொள்வதால் பித்தம் வாதம் மற்றும் கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது.