"எது கருப்பு கலர்ல மஞ்சளா."? அதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா.? ஆச்சரியம் அளிக்கும் பயன்கள்.!
நம் பகுதியில் மஞ்சள் என்பது மங்களகரமான நிறத்தில் இருக்கும் கிழங்கு என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் மஞ்சள், கருப்பு நிறத்திலும் விளையும் என்றால் நம்ப முடிகிறதா.? ஆம் அதுதான் உண்மை. நம் நாட்டின் மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும் கருப்பு மஞ்சள் விளைகிறது. இது கருமஞ்சள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கருப்பு மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியிருக்கின்றன.
மஞ்சள் பொதுவாகவே நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட ஒரு கிழங்காகும். இவற்றில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் குர்குமின் நிறைந்து இருக்கிறது. மேலும் மஞ்சள் ஒரு சிறந்த ஆன்டி மைக்ரோபியல் தன்மைகளைக் கொண்டது. கருப்பு மஞ்சள் சுவாசக் கோளாறு நிமோனியா மற்றும் ஆஸ்துமா போன்ற வியாதிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. இவை நுரையீரலில் கிருமித் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. பலவகையான சரும பிரச்சனைகளுக்கும் கருப்பு மஞ்சள் தீர்வாக இருக்கிறது.லுகோடெர்மா என்ற தோல் நோய் மருந்து கருப்பு மஞ்சளில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.
கருப்பு மஞ்சளில் இருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் நம் உடலில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற நோய்களிலிருந்து காக்கிறது. மேலும் இவை காயங்களுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இவற்றில் இருக்கக்கூடிய குர்குமின் புற்றுநோயால் செல்களில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்க உதவுகிறது. இது அறிவியல் ரீதியாகவும் நிரூபணமாகி இருக்கிறது. மேலும் ஆன்மீகத்திலும் பலவகை தோஷங்களுக்கு சிறந்த தீர்வாக கருமஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.