தொங்கும் தொப்பையை குறைக்கனுமா.? நம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் குடம்புளி ஒன்றே போதும்.!
நமது சமையல் முறையில் புளி என்றுமே முக்கிய இடம் வைக்கிறது. குறிப்பாக மீன் குழம்பு சாம்பார் மற்றும் ரசம் ஆகியவற்றில் புளியின் பங்கு இன்றியமையாதது. எனினும் நம் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் புளியை விட கேரளாவில் பயன்படுத்தப்படும் குடம்புளி ஏராளமான மருத்துவ நன்மைகளைக் கொண்டு இருக்கிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றின் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.
குடம்புளி ஜீரண உறுப்புகள் மற்றும் குடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனை உணவில் எடுத்துக் கொள்ளும் போது நம் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது மேலும் இரைப்பையின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குடம்புளிச்சாறு எடுத்து அதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் இயக்கம் சீராக அமையும். மேலும் குடம்புளி மலச்சிக்கலுக்கும் ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
குடம்புளி நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய கார்சினோல் என்ற மூலக்கூறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குடம்புளி அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கிறது. இந்த குடம்புளியை பயன்படுத்துவதால் மூட்டு வலி நீங்குவதோடு பக்கவாத நோய்க்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன.
குடம்புளியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் முச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்குகிறது. இதன் காரணமாக கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வைக்கிறது. மேலும் குடம்புளியுடன் நெய் சேர்த்து சாப்பிடும் போது முகத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் வறட்சி நீங்க உதவுகிறது. குடம்புளியுடன் வெதுவெதுப்பான நீர் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பசி கட்டுப்படுத்தப்படுவதோடு உடலின் வளர்ச்சியை மாற்றத்தை அதிகப்படுத்தி உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் குடம்புளியை பயன்படுத்தலாம். இதில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் சில பக்க விளைவுகளும் இருக்கின்றன.
நமது சமையல் முறையில் புளி என்றுமே முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக மீன் குழம்பு சாம்பார் மற்றும் ரசம் ஆகியவற்றில் புளியின் பங்கு இன்றியமையாதது. எனினும் நம் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் புளியை விட கேரளாவில் பயன்படுத்தப்படும் குடம்புளி ஏராளமான மருத்துவ நன்மைகளைக் கொண்டு இருக்கிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றின் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.
குடம்புளி ஜீரண உறுப்புகள் மற்றும் குடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனை உணவில் எடுத்துக் கொள்ளும் போது நம் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது மேலும் இரைப்பையின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குடம்புளிச்சாறு எடுத்து அதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் இயக்கம் சீராக அமையும். மேலும் குடம்புளி மலச்சிக்கலுக்கும் ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
குடம்புளி நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய கார்சினோல் என்ற மூலக்கூறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குடம்புளி அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கிறது. இந்த குடம்புளியை பயன்படுத்துவதால் மூட்டு வலி நீங்குவதோடு பக்கவாத நோய்க்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன.
குடம்புளியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் முச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்குகிறது. இதன் காரணமாக கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வைக்கிறது. மேலும் குடம்புளியுடன் நெய் சேர்த்து சாப்பிடும் போது முகத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் வறட்சி நீங்க உதவுகிறது.
குடம்புளியுடன் வெதுவெதுப்பான நீர் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பசி கட்டுப்படுத்தப்படுவதோடு உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் குடம்புளியை மிக ஏற்றது. இதில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் சில பக்க விளைவுகளும் இருக்கின்றன.