கடன் வாங்கியிருக்கீங்களா..? ஆப்பு வைத்த ஹெச்.டி.எஃப்சி. வங்கி..!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!
இஎம்ஐ என்பது “சமமான மாதாந்திர தவணை” ஆகும். அதாவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் செயல்முறையாகும். மேலும், நிலுவையில் உள்ள கடனின் அசல் மற்றும் வட்டியை செலுத்த இ.எம்.ஐ. பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஹெச்.டி.எஃப்சி. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது.
தற்போது உயர்த்தப்பட உள்ள இந்த வட்டி விகித செயல்முறை முன்னதாகவே நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் முடிவால், வங்கியில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களின் இஎம்ஐ அதிகரிக்கும். இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதாவது வாகனக் கடன்கள், தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள் மற்றும் மற்ற வகையான கடன்களின் விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, 9.20 சதவீத வட்டி விகிதத்தில் இருந்து 9.50 சதவீதமாக வசூலிக்கப்படும். மேலும், ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச கடன் விகிதமான MCLR யில் எந்த மாற்றமும் இல்லை என்று ஹெச்.டி.எஃப்.சி. வங்கி தெரிவித்துள்ளது.
Read More : ”கல்யாணம் ஆகியும் அடங்கல”..!! தங்கைக்கு அடிக்கடி தொல்லை..!! கொலை செய்து கடலில் தூக்கிப் போட்ட கொடூரம்..!!