தவெக தலைவர் விஜய்யின் பூர்வீக வீட்டை பார்த்துருக்கீங்களா..? இப்போது எப்படி இருக்கிறது..?
கடந்த ஜூலை மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை கிராமமான முத்துப்பேட்டைக்குத் தனது உடன்பிறந்த சகோதரருடன் சென்றிருந்தார் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். அங்கு அவரது தந்தையின் கல்லறையைப் புதுப்பித்து அதற்காகச் சடங்குகளைச் செய்திருந்தார். அதைவிட எஸ்.ஏ.சியின் அண்ணன் ராஜசேகர் தோற்றம் அப்படியே விஜய்யைப் போலவே இருந்தது. அதனால், அவர் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனார்.
அப்போது பேசிய சந்திரசேகர், தனது தந்தை ஸ்டேஷன் மாஸ்டராக இருந்ததால் பல ஊர்களில் தாங்கள் வாழ்ந்தாகவும், ஆனால் பூர்வீகம் என்றால் இந்தக் கடற்கரை கிராமம்தான் என்றும் கூறியிருந்தார். முத்துப்பேட்டை கிராமத்திற்கு முதன்முதலாக விஜய்யின் கொள்ளுத்தாத்தா சேனாதிபதி பிள்ளையுடன் குடியேறியுள்ளார். இவர், 1897இல் பிறந்து 1982இல் மறைந்துள்ளார். அவரது கல்லறை முத்துப்பேட்டை புனித வனத்து அந்தோணியார் ஆலய கல்லறையில்தான் உள்ளது.
கடந்த 4 தலைமுறைகளாக இதே கிராமத்தில் தான் விஜய்யின் குடும்பத்தினர் வசித்து வந்திருக்கின்றனர். பொதுவாக முத்துப்பேட்டை என அடையாளப்படுத்தினாலும் விஜய்யின் தாத்தா வாழ்ந்ததும் எஸ்.ஏ.சி பிறந்ததும் தண்ணீர் ஊற்று கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில்தான். இந்த வீட்டைப் பார்த்தால் அந்தக் காலத்துப் பங்களா போல் தோற்றம் அளிக்கும். எஸ்.ஏ.சி. புனித காணிக்கை அன்னை ஆலயம் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.
பின்னர் தங்கச்சி மடம் உயர்நிலைப் பள்ளியில் படித்திருக்கிறார். இதை இந்தத் தண்ணீர் ஊற்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இங்கே பாழடைந்து கிடக்கும் சந்தன நிவாஸ் என்ற பங்களாவில் தான் எஸ்.ஏ.எஸ். பிறந்துள்ளார். அவர் கடந்த ஜூலை மாதம் கல்லறை புதுப்பிப்பு விழாவுக்கு வந்தபோது இந்த வீட்டை அடையாளம் கண்டு மக்களிடம் கூறியுள்ளார். அதை இப்போது ஊர்க்காரர்கள் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெண் ஒருவர் கூறுகையில், எஸ்.ஏ.சியின் தந்தை இவரது வீட்டில்தான் வாடைக்கு ஆரம்பக் காலத்தில் இருந்துள்ளார். இந்த முத்துப்பேட்டை கிராமத்தில் பலர் தவெகவில் உள்ளனர். அவரது அரசியலை வரவேற்கின்றனர். ஊர்க்காரர் என்று பெருமை அவர்களின் பேச்சிலும், முகத்திலும் தாண்டவமாடுகிறது. சில இளைஞர்கள் அவர் சினிமா புகழ் அரசியல் வருகையால் கெட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஆக, தண்ணீர் ஊற்று கிராமத்தில் வாழ்ந்த விஜய்யின் தாத்தா வீடு இப்போது உள்ளது. அதை யார் பராமரிக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
முத்துப்பேட்டையில் உள்ள கல்லறைக்கு வரும் போது இந்த வீட்டுக்கும் எஸ்.ஏ.சி. வந்துள்ளார். முத்துப்பேட்டை, தங்கச்சிமடம், தண்ணீர் ஊற்று முழுக்க மீனவ கிராமம். இங்கு நிறைய மக்கள் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். விஜய்யின் தாத்தா பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்துவ மதம் பரவிய காலத்தில் இவர்கள் மதம் மாறியுள்ளனர். எஸ்.ஏ.எஸ். கிறிஸ்துவராக இருந்தாலும் அவரது மனைவி ஷோபா இந்து குடுப்பத்தைச் சேர்ந்தவர்.
எனவே, விஜய் வீட்டில் மேரி மாத வழிபாடும் உண்டு. சாய் பாபா வழிபாடும் உண்டு. இப்போது கூட சாய்பாபா கோயிலுக்குப் போய் மாநாட்டுக்காக வழிபாடு நடத்திய விஜய்யின் பெற்றோர், அவருக்கு அணிவிப்பதற்காக ஏலக்காய் மாலையைப் பூஜை செய்து கொண்டு வந்தார்கள் என்ற செய்தி வெளியானது. விஜய் அரசியல் முதல் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அவரைப் பற்றிப் பல செய்திகள் ஊடகங்களில் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக விஜய்யின் பூர்வீக வீடு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Read More : இவர்களுக்கு இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை..!! மத்திய அரசு அதிரடி..!!