இந்த மாதிரி ஓடிபி வந்திருக்கா?… உங்க பேங்க் அக்கவுண்ட் கேன்சலாகிடும்!… போலீஸ் எச்சரிக்கை!
பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை யாருக்குமே தெரிவிக்க வேண்டாம் எனவும் ஏதேனும் ஓடிபி எண்களை கேட்டாலும் பகிரவேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபகாலமாகவே, வங்கிகளின் பெயர்களை சொல்லி மோசடி வேலைகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைக்க வேண்டும், யாரிடமும் பகிர வேண்டாம். மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்று வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. வங்கியிலிருந்து பேசுகிறோம், மாதத்தவணையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக விவரங்களை சொல்லுங்கள், வங்கிக்கணக்கு ஓடிபி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டின் சிவிவி எண், பாஸ்வேர்டு, அக்கவுண்ட் நம்பர் என்ன? என்றெல்லாம் கேட்டு மோசடியில் ஈடுபடலாம். அதனால், வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருந்து எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று எத்தனையோ முறை போலீசார் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர். இருந்தபோதிலும் மோசடிப்பேர்களின் பிடியில் சில அப்பாவிகள் சிக்கிவிடுகிறார்கள்.
அதாவது, மர்மநபர்கள் ஒருவர் வங்கி அதிகாரியைப்போல் பேசி ரகசிய எண்ணை (ஓடிபி) பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை ஏமாற்றுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் பல பேரிடம் ஓடிபி எண்களை பெற்று பல லட்சம் மோசடி நடந்துள்ளதை குறிப்பிட்டு காவல் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனனர். "பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை யாருக்குமே தெரிவிக்க வேண்டாம். வங்கி மேலாளர்கள் ஒருபோதும் ஓடிபி கேட்கவே கேட்கவே மாட்டார்கள். அதனால், யாரேனும் உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால், தெரிவிக்க வேண்டாம் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள்" என்று காவல்துறையினர் அறிவுறுத்தியபடியே உள்ளனர்