Gpay, PhonePe-வில் இதை கவனிச்சீங்களா..? பணம் அனுப்பும்போது கவனம்..!!
யுபிஐ (UPI) இப்போது இந்தியாவில் முன்பை விட மிகவும் பிரபலமாக உள்ளது. கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் போன்ற செயலிகளில் உள்ள எளிமையான விஷயங்கள் UPI மீதான நம்பிக்கையை அதிகரிக்க உதவியுள்ளது. இந்நிலையில், ஒரு நாளில் UPI மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்யக்கூடிய தொகைக்கு வரம்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
சாதாரண யுபிஐ-க்கான பரிவர்த்தனை வரம்பு ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை உள்ளது. எந்த வங்கியும் 24 மணி நேரத்திற்குள் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான UPI பேமெண்ட்டுகளை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, ஒரு நாளில் UPI மூலம் நீங்கள் அனுப்பக்கூடிய தொகையும் நீங்கள் பயன்படுத்தும் ஆப்-ஐ பொறுத்தது.
Google Pay
GPay பயனர்கள் ஒரே நாளில் ரூ.1 லட்சத்திற்கு மேல் அனுப்ப முடியாது. இது தவிர, ஒரு நாளில் 10-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளைச் செய்யவும் முடியாது. அதாவது, நீங்கள் ஒரே பரிவர்த்தனையாக ரூ. 1 லட்சம் அல்லது பல்வேறு தொகைகளில் 10 பரிவர்த்தனைகள் வரை அனுப்பலாம்.
PhonePe
ஃபோன் பே ஆனது கூகுள் பே போல பரிவர்த்தனை வரம்புகளை ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சம் செலுத்தும் வரம்பைக் கொண்டுள்ளது. ஆனால், ஒரு நாளில் 10 பரிவர்த்தனைகள் என்ற வரம்பு PhonePe-வில் இல்லை.
Paytm
பேடிஎம்மில் ஒரு நாளில் ரூ. 1 லட்சம் வரை மட்டுமே பணம் செலுத்த அனுமதிக்கிறது. அது தவிர, UPI பேமெண்ட்டுகளுக்கு வரும்போது பேடிஎம்-க்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
Amazon Pay
Amazon Pay வழியாக ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்த அனுப்ப முடியும். இந்த செயலி ஒரு நாளில் 20 பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. மேலும், புதிய பயனர்கள் முதல் 24 மணிநேரத்தில் ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.