உங்கள் சொத்து ஆவணங்கள் தொலைந்து விட்டதா..? அப்படினா உடனே இந்த விஷயத்தை பண்ணுங்க..!!
வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என நம் முன்னோர்கள் சொல்வார்கள். என்னடா அவ்வளவு கஷ்டமா என கேட்கலாம் குருவி சேர்ப்பதுபோல சிறுக சிறுக சேர்த்து வாங்கிய சொத்தின் ஆவணம் எப்படிப்பட்ட மதிப்பு மிக்கது. சில எதிர்பாராத சம்பவங்களால் அவை தொலைந்து போகின்றன. நீங்களும் இதுபோன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், இனி கவலைப்பட தேவையில்லை. நீங்கள் நகல் சொத்து ஆவணத்தைப் பெறலாம். இதற்கு சில எளிய நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
சொத்து ஆவணங்களை இழந்தால், சொத்தை உரிமை கோர உங்களுக்கு எந்த வழியும், வாய்ப்பும் இல்லை என்பதே அர்த்தம். நிச்சயமாக, சொத்து உங்கள் பெயரிலோ அல்லது உங்கள் வீட்டில் உள்ள ஒருவரின் பெயரிலோ சப்-ரிஜிஸ்ட்ரால் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். ஆனால், திடீர் தேவை ஏற்பட்டால் அதைப் பெற முடியாது. அதனால் தான் காகிதம் தொலைந்து போனால் நகல் ஆவணங்களை உருவாக்கும் செயல்முறையை இப்பொழுதே தொடங்குவது நல்லது. இது மிகவும் சிக்கலான செயல்முறை அல்ல. மொத்தம் 3 நிலைகளில் இதனை செய்யலாம். இதன் மூலம் நீங்கள் நகல் சொத்து ஆவணங்களைப் பெற முடியும். காகித வடிவில் உள்ள சொத்து தொலைந்து போவதைத் தவிர, திருடப்பட்டாலும் அல்லது எரிக்கப்பட்டாலும் கூட நகல் காகிதங்களை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவதாக, ஆவணங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட பகுதியின் காவல் நிலையத்தில் நீங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உள்ளூர் போலீசார் மறுத்தால், ஆன்லைன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம். அதன்பிறகு ஆவணங்களை கண்டுபிடிக்க போலீசார் முயற்சிப்பார்கள். இதில் அவர்கள் தோல்வியுற்றால், அவர்கள் உங்களுக்கு ஒரு கண்டறிய முடியாத சான்றிதழை (Non Traceble) வழங்குவார்கள். காவல்துறை மூலம் சொத்து ஆவணங்களை தேடிய பிறகு, ஆவணம் கிடைக்கவில்லை என்றால், உங்கள் அடுத்த கட்டம் செய்தித்தாளில் விளம்பரம் கொடுப்பதாக இருக்கும்.
இந்த விளம்பரத்தில், சொத்து இழப்பு குறித்து அதன் முழு விவரங்களுடன் தெரிவிக்கப்படும். இதற்குப் பிறகு, சில நாட்கள் காத்திருக்க வேண்டும். பொதுவாக, 15 நாட்கள் காத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவேளை அந்த ஆவணங்கள் யார் கைகளிலேயும் கிடைத்தால் கண்டெடுத்தவர் அதைத் திருப்பித் தரக்கூட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு காலம் தாழ்த்தியும் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் நகல் ஆவணத்திற்கு விண்ணப்பிக்கலாம். சொத்து முதலில் பதிவு செய்யப்பட்ட அதே துணைப் பதிவாளர் அலுவலகத்தில் இந்த விண்ணப்பம் வழங்கப்படும்.
இந்த விண்ணப்பத்துடன், எஃப்.ஐ.ஆர். மற்றும் கண்டறிய முடியாத சான்றிதழின் நகல் மற்றும் செய்தித்தாளில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தின் நகலை இணைக்க வேண்டும். இங்கே சிறிய அளவில் கட்டணம் பெற்றுக்கொண்டு ஏற்றுக்கொள்வார்கள். 15-20 நாட்களுக்குப் பிறகு, சொத்தின் நகல் ஆவணங்கள் உங்களுக்கு வழங்கப்படும்.
Read More : கடல் மட்டத்திற்கு கீழே இருக்கும் மிக தாழ்வான பகுதி எது தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!