For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதா..? மீண்டும் எப்படி அப்ளை செய்வது..?

It has been announced that those who have rejected their applications for women's rights can appeal. How to join this scheme can be seen in this post.
09:16 AM Jun 28, 2024 IST | Chella
உங்கள் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதா    மீண்டும் எப்படி அப்ளை செய்வது
Advertisement

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் எப்படி சேர்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

இந்த திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக திருமணமான குடும்ப தலைவிகள் விண்ணப்பிக்க முடியும். அருகே உள்ள நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் சென்று இதற்கான விண்ணப்பங்களை பெறலாம். அல்லது இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். நாம் பூர்த்தி செய்த விண்ணப்பத்திற்கான அத்தாட்சி செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஆக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர், இ-சேவை மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகை வேண்டி மேல்முறையீடு செய்தவர்களில் 1 இலட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இத்திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதி வரை இவர்கள் கொடுத்தனர். இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த பணம் தற்போது வழங்கப்படுகிறது.

Read More : பெற்றோர்களே..!! இதை மட்டும் செய்தால் லட்சக்கணக்கில் பணம் வரும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement