நாட்டின் பாதுகாப்பை அடமானம் வைத்துவிட்டதா பாஜக?... பிரதமர் எப்போது வாயை திறப்பார்?... கனிமொழி கடும் கண்டனம்!
Kanimozhi: அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களில் பெயர் மாற்றம் குறித்து திமுகவின் கனிமொழி பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் 11 குடியிருப்புப் பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை என 30 பெயர்கள் சீன மொழியின் எழுத்துக்களிலும், திபெத்திய மொழியிலும் புதிய பெயர்கள் சூட்டி இருப்பதாக சீனாவில் இருந்து வெளிவரும் சைனா மார்னிங் போஸ்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த சனிக்கிழமை அன்று சீன குடிமை விவகாரத்துறை அமைச்சகம், அருணாச்சல பிரதேசத்திலுள்ள திபெத்திய தன்னாட்சி 30 பகுதிகளுக்கு பெயர்களை சூட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2017, 2019, 2021 என மூன்று முறை அருணாச்சல பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ள நிலையில், மீண்டும் புதிதாக பெயர்களை சூட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, பாஜக அரசு அனுமதித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை அடமானம் வைத்துவிட்டதா பாஜக?. தமிழகத்தில் வாக்குக்காக அவதூறுகளை பரப்பிவரும் மோடி, சீன எல்லை பிரச்சனை குறித்து எப்போது வாய் திறப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Readmore: Woww…! கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி திட்டம்… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!