பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா?… இந்த செயலி மூலமும் செக் பண்ணலாம்!
உங்கள் பிஎஃப் பணத்தை EPFO இல் ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்கிறதா? இதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இல்லையெனில், உங்களுக்கு பின்னர் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா என்பதை எப்படி செக் செய்வது குறித்து இதில் பார்க்கலாம். நிறுவனம் உங்கள் கணக்கில் PF பணத்தை டெபாசிட் செய்கிறதா இல்லையா என்பதை அறிய, உங்கள் EPFO பாஸ்புக்கை நீங்கள் சரிபார்க்க வேண்டும். ஆனால், இதற்கு உங்கள் UAN செயலில் இருக்க வேண்டும்.
இந்நிலையில் உங்கள் PF கணக்கு இருப்பைச் சரிபார்க்க, முதலில் EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.epfindia.gov.in/ க்குச் செல்லவும். இங்கே மேலே 'Our Services' என்ற விருப்பத்தைக் காண்பீர்கள். இந்த விருப்பத்தை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, இங்கிருந்து 'for employees' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கிருந்து, 'member passbook' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் UAN எண் மற்றும் பாஸ்வேர்ட்டை உள்ளிடவும். உங்கள் கணக்கில் உள்நுழைந்த பிறகு, பாஸ்புக் விருப்பம் தோன்றும். அங்கு கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் EPF இருப்பை இங்கே சரிப்பார்க்கலாம். இங்கே, PF கணக்கு இருப்பு, அனைத்து டெபாசிட்களின் விவரங்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை ஒரே கிளிக்கில் நீங்கள் பெறலாம்.
UMANG செயலி பல அரசு சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது. அதன்படி முதலில் EPF கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா என்பதை தெரிந்துக்கொள்ள Google Play Store அல்லது Apple App Store இலிருந்து UMANG செயலியை பதிவிறக்கவும். அதன்பிறகு உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும். பின்னர், "அனைத்து சேவைகள்" டேபின் கீழ், 'EPFO' ஐத் சர்ச் செய்யவும். 'பணியாளர் மைய சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ‘பாஸ்புக்கைக் காண்க’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட UAN மற்றும் OTP ஐ உள்ளிடவும். இதில் லாக் இன் செய்தவுடன் நீங்கள் உள்நுழைந்ததும், உங்கள் EPF இருப்பைக் காணலாம்.