மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! நவ.10 முதல் புதிய ரக பீர்களை விற்பனை செய்யும் தமிழ்நாடு அரசு..!!
தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் பீர்களின் விற்பனை அதிகரித்திருப்பதாலும், கடும் தட்டுப்பாடும் நிலவுவதாலும், வெளிமாநிலங்களில் இருந்து பீர் வாங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த எஸ்.ஓ.எம். என்ற நிறுவனத்திற்கு பீர் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிறுவனம் கும்மிடிப்பூண்டியில் மது ஆலையை தொடங்க உள்ளது.
இந்த கம்பெனியின் பீர்கள் நவ.10ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் விற்பனைக்கு வருகின்றன. அதன்படி நவ.10ஆம் தேதி முதல் டாஸ்மாக்கில் ஹண்டர், உட்பெக்கர், பவர் கூல் உள்ளிட்ட புதிய ரக பீர்கள் கிடைக்கும். மேலும் டிசம்பருக்கு பின்னர் மேலும் வெளிமாநில பீர்களும் விற்பனைக்கு வரவுள்ளன. சமீபத்தில் எஸ்.என்.ஜே குழுமத்திடம் இருந்து பார்லி பீர் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில் வெளிமாநில நிறுவனங்கள் பீர்களை குளிமையாக விற்பனை செய்ய பிரிட்ஜ் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பேச்சுவார்த்தையும் அதிகாரிகள் தரப்பில் நடப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் சூப்பர் ஸ்டிராங், கோல்டு பிரீமியம் லேகர் பீர், கிங்பிஷர், கிங்பிஷர் ஸ்டிராங், கிளாசிக் பீர், மேக்னம் ஸ்டிராங், எஸ்.என்.ஜே மற்றும் டீசலக்ஸ் என கிட்டத்தட்ட 35 வகை பீர்கள் விற்பனைக்கு உள்ளன. தமிழ்நாட்டில் தினமும் 50 லட்சம் பீர்கள் விற்பனையாகி வருகிறது. கோடைக்காலத்தில் இது 65 லட்சம் பெட்டியாக அதிகரித்து காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.