முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

களைகட்டிய தீபாவளி..!! கல்லா கட்டிய டாஸ்மாக்..!! 2 நாளில் ரூ.467 கோடி..!! முதலிடத்தில் எந்த மாவட்டம் தெரியுமா..?

11:40 AM Nov 13, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் இரு நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் இந்தாண்டு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் மது விற்பனை என்பது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தீபாவளி உள்ளிட்ட எந்த பண்டிகை என்றாலும் ஆடை, ஆபரணங்கள், பலகாரங்கள், இறைச்சி விற்பனை விவரம் வெளியாகிறதோ இல்லையோ மதுபானம் விற்பனை விவரம் வெளியாகிவிடுகிறது.

அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் இரு நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11, 12 ஆகிய நாட்களில் மொத்தம் ரூ.467.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 11ஆம் தேதி ரூ.221 கோடிக்கும், நவம்பர் 12ஆம் தேதி ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.

மதுரை, திருச்சியில் அதிகளவில் மது விற்பனை :

தீபாவளிக்கு முந்தைய நாளில் மதுரை மண்டலத்திலும், தீபாவளியன்று திருச்சி மண்டலத்திலும் அதிக மது விற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.52.73 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி நாளான நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் ரூ.55.60 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

Tags :
டாஸ்மாக் நிர்வாகம்தீபாவளி பண்டிகைமது விற்பனை
Advertisement
Next Article