For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தகாத உறவு.. கணவன், குழந்தையைக் கொன்று புதைத்த மனைவி..!! - 5 ஆண்டுகள் கழித்து தண்டனை விதித்த நீதிமன்றம்

After 5 years, the court has given verdict in the case of premeditated murder of husband and one-year-old son near Ranipet.
10:11 AM Nov 24, 2024 IST | Mari Thangam
தகாத உறவு   கணவன்  குழந்தையைக் கொன்று புதைத்த மனைவி       5 ஆண்டுகள் கழித்து தண்டனை விதித்த நீதிமன்றம்
Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாக கருதி தனது கணவர் மற்றும் ஒரு வயது மகனை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் 5 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடை அடுத்த தாஜ்புரா மந்தவெளி தெருவை சேர்ந்த 25 வயதான பெண் தீபிகா.. இவரது கணவர் ராஜா ஆற்காடு பகுதியில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்தது. தீபிகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.

இதற்கு இடையூறாக இருந்த கணவனையும், குழந்தையையும் கொலை செய்யத் திட்டம் தீட்டியிருக்கிறார் தீபிகா. அதன்படி, கடந்த 13-5-2019 அன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் ராஜாவின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றிருக்கிறார் மனைவி தீபிகா. அதன் பிறகு, தனது குழந்தையையும் இரக்கமில்லாமல் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். இதையடுத்து, இரு உடல்களையும் ஏரிக்கரை அருகே குழிதோண்டிப் புதைத்திருக்கிறார் தீபிகா. இதற்கு அவருடன் தொடர்பிலிருந்த கணவரின் நண்பரும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

இதை கண்டுபிடித்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீபிகா மற்றும் ஜெயராஜ் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் நீதிபதி செல்வம் இன்று தீர்ப்பினை வழங்கினார். வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், ராஜா (28) மற்றும் ஒரு வயது மகனை தீபிகா திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனையோடு, கூடுதலாக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என மொத்தம் 33 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், வழக்கிலிருந்து ஜெயராஜை விடுவித்தார். இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் தீபிகாவை வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

Read more : சுனிதா வில்லியம்ஸ் உடல்நிலையில் பின்னடைவா?. நாசா அனுப்பிய சரக்கு விண்கலம்!. அதில் என்ன இருக்கு தெரியுமா?

Tags :
Advertisement