For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாளை (ஜூன் 12) வெளியாகிறது ஹால்டிக்கெட்..!! தேர்வர்களே மறந்துறாதீங்க..!!

The hall ticket for individual candidates appearing for Diploma in Elementary Education will be released tomorrow (June 12).
05:37 PM Jun 11, 2024 IST | Chella
நாளை  ஜூன் 12  வெளியாகிறது ஹால்டிக்கெட்     தேர்வர்களே மறந்துறாதீங்க
Advertisement

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்குத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை (ஜூன் 12) வெளியிடப்படுகிறது.

Advertisement

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளுக்கான தேர்வு ஜூன்/ ஜூலையில் நடத்தப்பட உள்ளன. முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூன் 21 முதல் ஜூலை 8ஆம் தேதி வரையும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 20 முதல் ஜூலை 8ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை (ஜூன் 12) மதியம் வெளியிடப்படுகிறது. இதையடுத்து, தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தேர்வறைக்குள் ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் பாஜக ஆட்சி கவிழும்’..!! ’பேசாம காங்கிரஸ் இருந்திருக்கலாம்’..!! சுப்பிரமணியன் சுவாமி தாக்கு..!!

Tags :
Advertisement