கவனம்...! 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு...! முழு விவரம்...
நெல்லை மாவட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. ஆற்றல் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. திருநெல்வேலி மாநகரின் பல்வேறு பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்தது. கனமழை காரணமாக தென் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகளை பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட முடியவில்லை.
தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த 23-ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜனவரி 1-ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
மேலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் 10-ம் தேதி வரையும், 12 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4-ம் தேதி முதல் ஜனவரி 11-ம் தேதி வரையும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது.