குணா குகை பிளான் திடீர் ரத்து..!! அவசர அவசரமாக இன்றே சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்..!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க சென்ற முதல்வர் முக.ஸ்டாலின், பயணத் திட்டத்தை விட ஒரு நாள் முன்னதாக அதாவது இன்றே சென்னைக்கு திரும்புகிறார்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டார். 5 நாள் பயணமாக தனது குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் சென்றனர். அங்கு தனியார் தங்கும் விடுதியில் முதலமைச்சர் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வருகையால், கொடைக்கானலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொடைக்கானலில் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, குணா குகை, நட்சத்திர ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட திட்டமிட்டிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வுக்காக கொடைக்கானல் வந்திருக்கும் நிலையில் அவரை கட்சியினர் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், கொடைக்கானலில் திட்டமிட்டபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று பார்வையிடவில்லை. நட்சத்திர ஏரியில் படகு சவாரி மற்றும் கால்ஃப் மைதானத்தில் சிறிது நேரம் மட்டுமே முதலமைச்சர் விளையாண்டார்.
அதே நேரத்தில் பயணத்தின் போது பெரும்பாலும் பாம்பாறு பகுதியில் இருந்த நட்சத்திர விடுதியிலேயே குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். இந்நிலையில் பிரதமரின் பயணத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு அவர் உடனடியாக சென்னை திரும்புவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை செல்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட அந்த திட்டமும் திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை திரும்புகிறார். அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.
Read More : சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழப்பு..!! வழக்கில் திடீர் திருப்பம்..!! நாமக்கல்லில் அதிர்ச்சி..!!