For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குரூப் 2 காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

05:29 PM Dec 26, 2023 IST | 1newsnationuser6
குரூப் 2 காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு     டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது.

Advertisement

இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி முன்னதாக அறிவித்தது. பின்னர், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தேர்வு முடிவுகள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகின. முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்தத் தேர்வு கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், குரூப் 2 தேர்வு காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜனவரி 12ஆம் தேதி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. தற்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 785 அதிகரிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே இருந்த 5,446 பணியிடங்கள், 6,231 ஆக உயர்ந்துள்ளன. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
Advertisement