For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைத்தாள் குறிப்பு வெளியானது...!

Group 2, 2A exam provisional answer sheet note released
06:05 AM Sep 24, 2024 IST | Vignesh
குரூப் 2  2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைத்தாள் குறிப்பு வெளியானது
Advertisement

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது

தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர், தலைமைச்செயலக உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளில் 507 காலியிடங்களையும், அதேபோல், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட குரூப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்களையும் (மொத்தம் 2,327) நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏதேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜுன் மாதம் வெளியிட்டது.

Advertisement

கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 2,763 தேர்வு மையங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குரூப் 2 தேர்வை எழுதினார்.முதல்நிலைத் தேர்வில் மெயின் தேர்வுக்கு ஒரு காலியிடத்துக்கு 10 பேர்' என்ற விகிதாச்சார அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில், தற்போது 2,327 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் சுமார் 24 ஆயிரம் பேர் மெயின் தேர்வெழுத தகுதி பெறுவர். ஒருவேளை, காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்னும் அதிகமானோருக்கு மெயின் தேர்வெழுத வாய்ப்புக் கிடைக்கும். தற்போது குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குரூப் 2, 2ஏ பணித் தேர்வுக்கான வினாத்தாள்களுடன் கூடிய விடைக்குறிப்பு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in/) வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்பேசனைகள் இருப்பின் அதன் விவரங்களை உரிய சான்றுகளுடன் செப்டம்பர் 29-ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி வலைத்தளம் வழியாக தெரிவிக்க வேண்டும். தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்கள் மறுப்பை தெரிவிக்க வேண்டும். இறுதி விடைக்குறிப்பு தேர்வுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்

Tags :
Advertisement