முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இயற்கை எழில் கொஞ்சும் பச்சை மலை… அடுத்த சம்மர் ட்ரிப் இங்க பிளான் பண்ணுங்க.! அட்டகாசமான டூரிஸ்ட் ஸ்பாட்.!

06:50 AM Nov 21, 2023 IST | 1Newsnation_Admin
Advertisement

இதுவரை சுற்றுலா செல்வதற்கு மலை வாசஸ்தலங்கள் என்றால் அது ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு என்றுதான் சென்று இருப்போம். இவை இல்லாமல் புதியதாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அது கிழக்கு தொடர்ச்சி மலைகளில் இருக்கும் பச்சை மலை.

Advertisement

இது திருச்சி, பெரம்பூர் மற்றும் சேலம் மக்களுக்கு அருகில் இருக்கக்கூடிய ஒரு சுற்றுலாத்தளமாகும். இது திருச்சியில் இருந்து 103 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த மலை, கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் இருக்கிறது. மற்ற ஊர்களில் இருந்து பயணிகள் இங்கு சுற்றுலா வர வேண்டும் என்றால் திருச்சி வந்து திருச்சியில் இருந்து பேருந்து மற்றும் கார்களின் மூலம் வர முடியும். இங்கு சுற்றிப் பார்ப்பதற்கு அருவிகள் மலேயேற்றம் மற்றும் மருத்துவ குணம் மிக்க மூலிகைகள் நிறைந்த தோட்டங்கள் ஆகியவை இருக்கின்றன.

இங்கு இருக்கும் மனதை மயக்கும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் பசுமை போர்த்திய மழையின் அழகை பசித்தபடியே உங்கள் விடுமுறையை கழிக்க இது ஒரு சிறந்த இடமாகும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்று இருக்கும் மலைகள் சூழ்ந்த இந்தப் பகுதியில் கோரையாறு அருவி மங்கலம் அருவி மற்றும் மயிலுத்து அருவி ஆகியவை உள்ளன. இந்த அருவிகளில் குறித்தபடியே இயற்கையின் அழகை ரசிக்கலாம்.

இந்தப் பகுதியில் பழங்குடி மக்களின் குடியேற்றங்களும் இருக்கின்றன. இந்த மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து பச்சை மழையை தங்களது வீடு என பாசத்துடன் அழைத்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு சுற்றுலா செல்வதன் மூலம் இந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் தெ‌ரிந்து கொள்ளலாம். பட்ஜெட்டில் சென்று வர இது ஒரு சிறந்த சுற்றுலா தளமாகும்.

Tags :
சம்மர் ட்ரிப்திருச்சிபச்சை மலை
Advertisement
Next Article