குடல் புண்களை ஆற்றும் மருத்துவ குணம் கொண்ட பச்சை வாழைப்பழம்.! எப்படி பயன்படுத்தலாம்.!?
நாம் உண்ணும் உணவுகளை செரிப்பதற்கும், உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்தடுத்து உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்புவதற்கு முக்கிய கடத்தியாக குடல் உள்ளது. நாம் உண்ணும் உணவுகளை ஜீரணப்பதற்கு வயிற்றில் ஒரு வகையான அமிலம் சுரக்கும். இந்த அமிலங்கள் அதிகப்படியாக சுரப்பதாலும், நச்சுகள் தேங்குவதாலும் வயிற்றில் புண் ஏற்படுகிறது. இதனையே அல்சர் என்று குறிப்பிடுகிறோம்.
குடலின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த புண்களை சரி செய்வதற்கும், அதிகப்படியான அமிலத்தை சீர்படுத்துவதற்கும் பல மருந்துகள் இருந்தாலும் அது பக்க விளைவையை ஏற்படுத்தும். எனவே வாழைப்பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றுப் பகுதியில் உள்ள புண்களை குணப்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த அல்சர் பிரச்சினையால் நெஞ்செரிச்சல், வாய்ப்புண், மலச்சிக்கல், போன்ற தொல்லைகளும் ஏற்படும். இதற்கு தேங்காய் மற்றும் தேங்காய் பால் சிறந்த தீர்வாக அமையும். தேங்காயை வாயில் போட்டு மென்று வந்தால் வாய்ப்புண் குறையும். தினமும் காலையில் காபி, டீக்கு பதிலாக தேங்காய் பால் குடித்து வர மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
மேலும் காரம் நிறைந்த உணவுகள், கார்பனேட்டட் செய்யப்பட்ட குளிர்பானங்கள், எண்ணெயில் பொரித்த தின்பண்டங்கள் போன்றவற்றை சாப்பிடாமல் தவிப்பது நலம். குறிப்பாக வீட்டில் சமைத்த ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் அல்சர் பிரச்சனையை எளிதில் குணப்படுத்தலாம்.