For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெரும் சோகம்..!! சாகித்ய அகாடமி விருது பெற்ற பெண் எழுத்தாளர் ஸ்ரீதேவி காலமானார்..!!

10:57 AM Jan 17, 2024 IST | 1newsnationuser6
பெரும் சோகம்     சாகித்ய அகாடமி விருது பெற்ற பெண் எழுத்தாளர் ஸ்ரீதேவி காலமானார்
Advertisement

சாகித்ய அகாடமி விருது பெற்ற மலையாள பெண் எழுத்தாளர் ஸ்ரீதேவி, உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.

Advertisement

பிரபல மலையாள எழுத்தாளரான கே.பி.ஸ்ரீதேவி, நம்பூதிரி பெண்களின் வாழ்க்கையை நாவல்களாக வடித்தவர். தனித்துவமிக்க அவரது எழுத்துக்கள் அவருக்கென்று மலையாளத்தில் நிரந்தரமான இடத்தை பெற்றுக் கொடுத்தது. 'யக்ஞம்', 'பறைபெட்ட பந்திருகுளம்', 'அக்னிஹோத்திரம்' போன்ற பிரபல படைப்புகளை அவர் எழுதியிருக்கிறார். மிக இளம்வயதிலேயே எழுதத் தொடங்கிய ஸ்ரீதேவி, நாவல் மட்டுமின்றி சிறுகதைகள், சிறுவர் இலக்கியங்கள் போன்றவற்றிலும், கதை சொல்லல், நாடகங்கள் என மலையாள இலக்கியத்திற்கு தனது இறுதிக்காலம் வரை பங்காற்றியுள்ளார்.

நம்பூதிரி பிராமண சமூக பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படைப்புகளை எழுதி மிக பிரபலமானார். இவரது 'மூன்றாம் தலைமுறை' நாவல் அதிகளவில் வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. சாகித்ய அகாடமி விருது உட்பட கேரள மாநில விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். வயதுமுதிர்வு காரணமாக அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கே.பி.ஸ்ரீதேவி, கேரள மாநிலம் கொச்சியில் அவரது மகனின் வீட்டில் வசித்து வந்தார். வயோதிகம் மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக நேற்றிரவு அவர் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement