For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெரும் சோகம்..!! குன்றத்தூர் சுப்புலட்சுமி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!! கண்ணீரில் பக்தர்கள்..!!

Kunradthur Subbulakshmi, an elephant caught in the fire, died without treatment
01:13 PM Sep 13, 2024 IST | Chella
பெரும் சோகம்     குன்றத்தூர் சுப்புலட்சுமி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு     கண்ணீரில் பக்தர்கள்
Advertisement

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றத்தூரில் பிரபல முருகன் கோவிலான சண்முகநாதர் கோவில் உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த கோயிலுக்கு கடந்த 1971ஆம் ஆண்டு ஒன்று பக்தரால் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு, சுப்புலட்சுமி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். மேலும், கோவில் விழாக்களிலும் யானை பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. கடந்த 50 ஆண்டுகளாக நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தான் யானை இருந்தது.

Advertisement

இந்நிலையில், நேற்று முன்தினம் யானை தங்க வைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் மேல் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் யானைக்கு கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி யானை உயிரிழந்தது.

இதனால், குன்றத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பக்தர்கள் சோகத்தில் மூழ்கினர். மேலும், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் யானைக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்கள் பலரும் திரண்டு வந்து சுப்புலட்சுமி யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Read More : ஓராண்டு நிறைவு..!! மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு செம குட் நியூஸ்..!! தொகை மேலும் உயர்வு..?

Tags :
Advertisement