பழங்குடியின சமுதாயத்தினருக்கான 'கிராமின் உத்யாமி திட்டம்' பற்றி தெரியுமா?
பழங்குடியின சமுதாயத்தினரின் உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக, திறன் பயிற்சி அளிக்கும் வகையில், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) சேவா பாரதி மற்றும் யுவ விகாஸ் சங்கத்துடன் இணைந்து, கிராமின் உத்யாமி திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்திய இளைஞர்களை பல திறன் பெற்றவர்களாக மாற்றுவதுடன், வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக, செயல்முறைத் திறன் ஏற்படுத்துவதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பழங்குடியின சமுதாயத்தினரை தொழிலாளர்களாக ஈடுபடுத்தி, அவர்களது ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்து, அவர்களது இருப்பிடத்திற்கேற்ப, தற்சார்பு உடையவர்களாக மாற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார். மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, இத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.
Read more ; அனிமல் பட கட்டில் காட்சியை ரீ-மேக் செய்த நகைச்சுவை நடிகர்!! இணையத்தில் வைரல்..