ரேஷன் கார்டு பயனாளர்களே! உடனடியாக இந்த விஷயத்தை பண்ணுங்க… கால அவகாசம் அறிவிப்பு.!
ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆதார் எண்ணையும் இணைப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் மாதம் இறுதி வரை நீட்டித்து புதிய உத்தரவு வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இதற்கான கால அவகாசம் ஏற்கெனவே முடிந்துவிட்டது.
தற்போது பொது மக்களின் நலன் கருதி இந்த கால அவகாசம் டிசம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களையும் ரேஷன் கார்டில் இணைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்களது பெயர் நீக்கப்பட்டு ரேஷன் சலுகைகளும் தரப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மத்திய அரசின் ஒரே ரேஷன் ஒரே தேசம் என்ற திட்டத்தின் கீழ் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் எண்ணையும் இணைத்திருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு சட்டம் 2013ன் படி ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதமாக இருந்தது. தற்போது இது டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் அதாரியங்களையும் இணைத்து கேஒய்சி சரி பார்த்து செய்யப்பட வேண்டும் என அரசு அறிவித்திருக்கிறது.