For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'Google Chrome' பயனர்களுக்கு அரசு விடுத்த எச்சரிக்கை.! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டியவை.!

07:19 PM Feb 25, 2024 IST | 1newsnationuser7
 google chrome  பயனர்களுக்கு அரசு விடுத்த எச்சரிக்கை   உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டியவை
Advertisement

கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் அதன் பயனர்களுக்கு கூகுள் குரோம்(Google Chrome) பிரவுசரை பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரித்து இருக்கிறது. இந்த பிரவுசரில் இருக்கும் அதிக பாதிப்புகள் இந்திய அரசு இணைய பாதுகாப்பு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை அதிக ஆபத்தானவை எனவும் இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் பெரும்பான்மையான பாதிப்புகள் கூகுள் குரோம் பிரவுசரின் டெஸ்க்டாப் வெர்ஷனோடு தொடர்புடையது இணைய எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் தகவலின் படி ஒரு நபரின் தனிப்பட்ட டேட்டாக்களை அணுகுவதற்கும் இலக்கு வைக்கப்பட்ட கம்ப்யூட்டரில் தன்னிச்சையான குறியீடுகளை இயக்குவதற்கும் குரோம் பிரவுசரில் இருக்கும் இந்த பாதிப்புகளை ஹேக்கர்கள் பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சியின் கூற்றுப்படி லினக்ஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் 122.0.6261.57 இதற்கு முந்தைய பதிப்பிலும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் 122.0.6261.57/58 க்கு முந்தைய பதிப்புகளிலும் பாதிப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கூகுள் குரோமில் உள்ள பாதிப்புகளுக்கு இணையதளத்தை தனிமைப்படுத்துதலில் முறையற்ற செயலாக்கம், கண்டன்டுகளின் பாதுகாப்பு பாலிசி தகவல்கள் மற்றும் தரவுகளை பதிவிறக்கம் செய்வதில் முறையாக கட்டுப்பாடு இல்லாத கொள்கை போன்றவை காரணமாக இருக்கலாம் என கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் தெரிவித்துள்ளது .

குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு இணையதள பக்கத்தை பயனர்களை பார்வையிட வைப்பதன் மூலம் ஹேக்கர்கள் குரோம் பிரவுசரில் உள்ள இந்த பாதிப்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் தெரிவிக்கிறது. மேலும் google chrome பிரவுசரை பயன்படுத்துபவர்கள் அந்த நிறுவனம் வெளியிடும் பாதுகாப்பு தொடர்பான அப்டேட்களையும் இன்ஸ்டால் செய்யுமாறு அறிவுறுத்துகிறது. மேலும் பாதுகாப்பு வசதிகளுடன் கூகுள் குரோம் தனது பிரவுசரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பினை வெளியிடும்போது பயனர்கள் அந்த புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்யுமாறு அறிவுரை வழங்குகிறது.

கூகுள் குரோம் பிரவுசர் தானாக அப்டேட் செய்யப்பட்ட பின்பு பிரவுசரை மீண்டும் ஓபன் செய்யுமாறு கூகுள் கூறுகிறது. அதனை மீண்டும் திறந்த பின் பயனர்கள் தாங்களே தங்களது பிரவுசரை அப்கிரேட் செய்து கொள்ளலாம் .

கூகுள் குரோம் பிரவுசரை அப்டேட் செய்வது எப்படி :

உங்களது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் கூகுள் குரோம் பிரவுசரை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

பிரவுசரின் வலது புற கார்னரில் இருக்கும் மூன்று வெர்டிகள் கோடுகளை கிளிக் செய்யவும். கிளிக் செய்த பின் உதவி என்பதை தேர்ந்தெடுக்கவும்.

கூகுள் குரோம் தகவல்கள் அடங்கிய ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

கூகுள் குரோம் இப்போது புதிய அப்டேட்டிற்கான இன்ஸ்டலேஷனை தொடங்கும்.

அப்டேட் முடிந்ததும் மறுபடியும் கூகுள் குரோமை ஓபன் செய்யவும்.

English Summary: As per the cyber security response team warned chrome users that there are some issues in google chrome browser. It may be vulnerable to hackers.

Advertisement