For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இரவு நேரத்தில் இந்த இடத்தில் மட்டும் தூங்காதீங்க..!! மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெரிய ஆபத்து காத்திருக்கு..!!

The elders in the house will tell you not to sleep under the tree at night.
04:49 PM Oct 08, 2024 IST | Chella
இரவு நேரத்தில் இந்த இடத்தில் மட்டும் தூங்காதீங்க     மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெரிய ஆபத்து காத்திருக்கு
Advertisement

இரவு நேரங்களில் மரத்தின் அடியில் படுத்து தூங்க வேண்டாம் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வார்கள். நாம் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் தேவை. நாம் நாம் சுவாசிக்கும்போது ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொண்டு, கார்பன் டை ஆக்சைடை வெளிவிடுகிறோம். மனிதனை போலவே, மரங்களும் உயிர்வாழ்வதற்கு மற்றும் கார்பன் டை ஆக்சைடு தேவையாக உள்ளது. எனவே, நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு எடுத்துக் கொண்டு, சுத்தமான காற்றாக ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இந்த சுத்தமான ஆக்ஸிஜனைதான், நாம் சுவாசிக்கிறோம்.

Advertisement

ஆனால், பகலில் மட்டுமே மரங்கள் அசுத்த காற்றான கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இரவில் ஆக்ஸிஜனை உள்வாங்கிக்கொண்டு, கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. அந்த இரவு நேரத்தில், மரத்திற்கு அடியில் நாம் படுக்கும்போது, நமக்கு தேவைப்படும் சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால், மரங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை நாம் சுவாசிக்க வேண்டிய நிலைமை வந்துவிடும்.

மேலும், காற்றின் அசைவுகளும் இரவில் மிகவும் குறைவாகவே இருக்கும். காற்றின் அசைவு இல்லாவிட்டாலும், நமக்கு ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால், கரியமிலவாயுவின் அளவும் அதிகரித்துவிடுகிறது. இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சரியாக மூச்சுவிட முடியாது. இதனால், மூச்சு திணறி சிலசமயம் தூக்கத்திலிருந்து அலறி எழுந்துவிடுவோம். இப்படி மூச்சுதிணறுவதைதான், "சுற்றிவளைத்து" மரத்தில் பேய் இருப்பதாகவும், அது வந்து நம்மை அமுக்கிவிடுவதாகவும் பெரியவர்கள் சொன்னார்கள். ஆனால், இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் தூங்கக் கூடாது என்பதற்கு அறிவியல் காரணம் இதுவே என்கிறார்கள்.

ஆனால், மூச்சுத் திணறும் அளவுக்கெல்லாம் கார்பன் டை ஆக்ஸைடு இருக்காது என்று இதற்கு எதிரான கருத்து சொல்லப்படுகிறது. அதாவது, மரத்தின் அடியில் தூங்கும்போது, வீட்டிற்குள் இயல்பாக படுப்பதுபோல மனநிலை இருக்காது. மரக்கிளைகள் அல்லது மரத்தில் இருந்து வேறு ஏதாவது, நம்மீது விழுந்துவிடக்கூடும் என்பதால், இரவில் மரத்தின் அடியில் தூங்கவேண்டாம் என்கிறார்கள். ஆனால், இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அந்த காலத்தில், மழை பெய்தால் "இடி தாங்கிகள்" அவ்வளவாக இல்லை என்பால், மரங்களின் இடி அதிகமாக இறங்கிவிடும் ஆபத்து இருந்தது. அதனால்தான், இரவில் மரத்தினடியில் படுக்கக்கூடாது என்கிறார்கள். இதில் எந்த காரணம் உண்மை என்று தெரியவில்லை. ஒருவேளை இவை எல்லாமே உண்மையாகவும் இருக்கலாம். எப்படியோ, இரவு நேரத்தில் மரத்தின் அடியில் தூங்குவதால், உடலுக்கு நன்மை என்று யாருமே இதுவரை ஊக்கப்படுத்தவில்லை.. எனவே, மரத்தடியில் இரவில் தூங்குவதை தவிர்ப்பது நல்லது.

Read More : தமிழ்நாட்டில் 47,000 பேருக்கு வேலை ரெடி..!! 14 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியது தமிழ்நாடு அமைச்சரவை..!!

Tags :
Advertisement