தூள்...! தமிழகத்தில் 2024- ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை…! மொத்தம் 24 நாட்கள்…! முழு விவரம் இதோ…
தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் 2024-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 2024-ம் ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகள், கழகங்களுக்கும் 2024-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தப் பொது விடுமுறை நாள்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் அனைத்து வாரியங்கள் முதலியவற்றுக்கும் பொருந்தும் எனவும் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து அலுவலகங்களும், பின்வரும் நாள்களில் மூடப்படவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பொது விடுமுறை நாள்களாக குறிப்பிடப்பட்ட “ஞாயிற்றுக் கிழமைகளுடன்” பின்வரும் நாள்களும், 2024-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாள்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 24 நாட்கள் விடுமுறை தினங்களில் 4 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துள்ளது.
அரசு விடுமுறை அறிவித்துள்ள நாட்களில், ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு , ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 உழவர் திருநாள், ஜனவரி 25 தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 29 புனிதவெள்ளி, ஏப்ரல் 10 தெலுங்கு வருட பிறப்பு, ஏப்ரல் 11 ரம்ஜான் பண்டிகை, ஏப்ரல் 14 தமிழ் வருட பிறப்பு, ஏப்ரல் 21 மகாவீர் ஜெயந்தி, மே 1 தொழிலாளர் தினம், ஜூன் 17 பக்ரீத் பண்டிகை, ஜுலை 17 மொஹரம் பண்டிகை, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 26 கோகிலாஷ்டமி, செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 7 மீலாடி நபி, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 11 சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, அக்டோபர் 12 விஜயதசமி, அக்டோபர் 31 தீபாவளி, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகும்.
ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தைபூசம், விநாயகர்சதூர்த்தி, தீபாவளி ஆகிய முக்கிய விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும், ரம்ஜான் மொகரம் பண்டிகைகள் சனிக்கிழமைகளிலும் வருகிறது. பொங்கல் கிறிஸ்துமஸ் தமிழ்புத்தாண்டு ஆகியவற்றை ஒட்டி தொடர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.