For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'30 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை'..!! 'ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு'..!! காங்கிரஸ் கட்சி அதிரடி அறிவிப்பு..!!

05:23 PM Mar 19, 2024 IST | 1newsnationuser6
 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை       ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு      காங்கிரஸ் கட்சி அதிரடி அறிவிப்பு
Advertisement

INDIA கூட்டணி ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப்பணிகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளன. பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும் களம் காண்கின்றனர். பாஜகவும், காங்கிரஸும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், பிற கட்சிகளும் தங்களது பிரச்சார தேதிகளை அறிவிக்க தொடங்கிவிட்டன.

இப்படி, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் வென்றால் மக்களுக்கு என்ன செய்வோம் என்பது குறித்து கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, தொழிலாளர்களுக்கு என அடுத்தடுத்து பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது. தேர்தல் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், சில வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகள் :

* 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசியல் சாசன திருத்த சட்டம் இயற்றப்படும்.

* சாதிவாரி கணக்கெடுப்பு, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்படும்.

* I.N.D.I.A கூட்டணி ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப்பணிகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

* இளைஞர்களுக்கான ஸ்டார்ட்அப் திட்டத்திற்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச வருவாய் சட்டம் கொண்டுவரப்படும்.

* பெண்களுக்கு அரசுப் பணிகளில் 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* விவசாயப் பணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

Read More : #Just Now | கிண்டி ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! மனைவியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற கணவன்..!!

Advertisement