முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”அரசு ஊழியர்கள் இனி டவுசர் அணிந்து கொண்டு வரலாம்”..!! மத்திய அரசு போட்ட உத்தரவு..!! காங்கிரஸ் கடும் விமர்சனம்..!!

With this decision of the central government, government officials can wear dowsers and come to their offices
03:30 PM Jul 22, 2024 IST | Chella
Advertisement

அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்ற விதி தற்போது நடைமுறையில் உள்ளது. பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொது நிறுவனங்களில் இந்த விதி பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இவ்விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "காந்திஜியின் படுகொலையைத் தொடர்ந்து 1948 பிப்ரவரியில் சர்தார் படேல் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தார். பின்னர், நன்னடத்தை உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் இந்த தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. பின்னர் கூட நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மூவர்ணக் கொடி பறக்கவிடபடவில்லை. பின்னர 1966ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளில் ஈடுபட அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஜூன் 4, 2024-க்குப் பிறகு, தன்னைத்தானே புனிதராகவும், உயிரியல் ரீதியில் பிறக்காதவர் என்றும் அறிவித்துக் கொண்ட பிரதமருக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்துவிட்டதால் அதனை சரிசெய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் அரசு அதிகாரிகள் டவுசர் அணிந்து கொண்டு அலுவலகங்களுக்கு வரலாம்" என விமர்சித்துள்ளார்.

Read More : ரேஷன் அட்டைதாரர்களே..!! இந்த தேதியை நோட் பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
அரசியல் கட்சிஅரசு ஊழியர்கள்காங்கிரஸ் கட்சிமத்திய அரசு
Advertisement
Next Article